Proverbs to Ponder



1.Make hay while the sun shines.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

2.Birds of same feather flock together.

இனம் இனத்தோடு சேரும்.

3.A contented mind is a continual joy.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

4.The mills of God grind slow but sure.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

5.Where there is a will there is a way.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

6.The pen is mightier than the sword.

பேனாவின் முனை கத்தியின் முனையைவிட வலிமையானது.

7.Empty vessels make the most noise.

குறைகுடம் கூத்தாடும்.

8.A man is known by the company he keeps.

நண்பர்களைக் கொண்டு ஒரு மனிதனை அடையாளம் காணலாம்.

9.Fortune favours the brave.

உழைப்பவர்களைத்தான் அதிர்ஷ்டம் அணுகும்.

10.Man proposes God disposes.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்.

11.Slow and steady wins the race.

நிதானம் பிரதானம்.

12.Distance lends enchantment to the view.

(Blue are the hills that are far away)

இக்கரைக்கு அக்கரைப் பச்சை.

13.Charity begins at home.

தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்.

14.Brevity is the soul of wit.

சுருக்கம் சொல்லி விளங்க வை.

15.Bend the twig bend the tree

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

16.A guilty conscience needs no accuser.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

 17.All are not saints that go to church.

வெளுத்ததெல்லாம் பால் இல்லை.


18.Hasty climbers have sudden falls.

திட்டமிடாத செயல் திடீர் தோல்வியில் முடியும்.

19.A constant guest is never welcome.

அடிக்கடி வரும் விருந்தாளி அவமானத்திற்கு உள்ளாவான்.

 20.Too many cooks spoil the broth.

ஒருவர் செய்ய வேண்டிய வேலையை பலர் செய்தால் பாழாய்ப் போகும்.

Comments

Popular Posts