இயக்கம்

 பிறவி என்பது ஆற்று நீர், குளத்து நீர்,கடல் நீர் போன்றவை ஆவியாகி பின் மழையாகி மீண்டும் ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் ஆகி.. இந்த சுழற்சியே உயிர்களுக்கும் ஏற்படுகிறது.


ஆனால் ஓர் உயிர் முழுமையடையும் போது,கடவுள் என்ற நிலையை அடைந்தாலும்,அது மீண்டும் பிறப்பெடுக்கிறது.கணிணியில் மேம்பட்ட கணினி உருவாகி பின் அதைவிட மேம்பட்ட... என்று மீண்டும் மீண்டும் உருவாதல் போல... உயிரானது தன்னை மேம்படுத்திக் கொள்ள மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கின்றது.அந்த சுழற்சி நடந்துகொண்டேதான் இருக்கும்.ஏனென்றால் உயிரின் கற்றல் ஒரு தொடர் நிகழ்வு.


ஏன் என்றால் இந்த அண்டம் முழுமையுமே உயிர்களால் ஆனது.


உயிரற்றது என்று ஒன்று இல்லை.அனைத்து உயிர்களும் அனைத்து நிலைகளையும் எடுக்கின்றன.


இயக்கம் நடந்துகொண்டே இருக்கின்றது.


இயற்கையில் நாம், நம்மில் இயற்கை.நம்மை நாமே ஆக்கிக் கொள்கிறோம்.நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம்.இது தொடர் நிகழ்வு.


இயக்கம் ஒருபோதும் நிற்பதில்லை.


R.G.Ramesh

GHSS - Sundaraperumalkoil.

Comments

Popular Posts